அனைத்து ரூபாய் நோட்டுகளும் புதியதாக அறிமுகப்படுத்தப்படும் – இந்திய அரசு அறிவிப்பு!

வரக்கூடிய மாதங்களில் அனைத்து ரூபாய் நோட்டுகளும் புதியதாக அறிமுகப்படுத்தப்படும் என இந்திய அரசு தெரிவித்துள்ளது.
திங்களன்று, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என்ற அறிவிப்பையடுத்து மக்கள் மத்தியில் குழப்பங்களும் சிரமங்களும் நிலவுகின்ற நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
பொருளாதார விவகார அமைச்சகத்தின் மூத்த அதிகாரி சக்திகாந்த தாஸ், புதிய நோட்டுகள் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு வசதிகள் மற்றும் புதிய வடிவத்தில் வரவுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் புதிய வடிவம் மற்றம் புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மீண்டும் அறிமுகப்படுத்தப்படும் என்றும், புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளின் புழக்கம் கண்கானிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
வரி ஏய்ப்பு மற்றும் மோசடியை ஒழிப்பதை இலக்கு வைத்தே இவ்வாறு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் அது பலதரப்பட்ட சிரமங்களை உருவக்கியுள்ளது குறிப்பாக தங்களின் தினசரி வாழ்வாதாரத்திற்கு பணத்தை நம்பியிருக்கும் நகர்ப்புற ஏழை வணிகர்கள் மற்றும் சிறு தொழில் வணிகர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.இந்நிலையில் தங்கள் ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்காக மக்கள் காலையிலிருந்து வங்கிகளில் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கின்றனர்.
Related posts:
|
|