அதிகரித்துவரும் வெள்ளத்திற்கு 52 பேர் பலி!

இந்தியாவின் கிழக்கு மாநிலங்களில் தொடர்ச்சியாக பெய்த பருவ மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் குறைந்தது 52 பேர் கொல்லப்பட்டதுடன் ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மோசமாக பாதிக்கப்பட்ட வடமேற்கு மாநிலமான அஸாமுக்கு விஜயம் செய்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கடந்த வாரத்தில், மழையுடன் தொடர்புடைய 26 இறப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இடம்பெயர்ந்தவர்கள், வீடுகளில் தவிப்பவர்கள், தங்களது நிலங்கள், பயிர்நிலங்கள், வாழ்வாதாரங்கள் ஆகிவற்றை இழந்தவர்கள் உள்ளடங்கலாக, இரண்டு மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில இடர் முகாமைத்துவ அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, தாழ்வான மற்றும் மூழ்கிய பகுதிகளிலிருந்து படைவீரர்கள், கிராமவாசிகளை மீட்டுள்ளனர்.
இது தவிர, கிழக்கு மாநிலமான பிஹாரையும் வெள்ளம் தாக்கியுள்ள நிலையில், 26 பேர் பலியாகியுள்ளதுடன், 2.2 மில்லியன் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பல ஆறுகள், ஆபத்தான எல்லையை தாண்டிப் பாய்வதாக கூறப்பட்டுள்ளது.
Related posts:
|
|