அதிகரிக்கும் போர் பதற்றம் : தனது நாட்டின் குடிமக்கள் அனைவரும் சவுதி அரேபியா விடுத்துள்ள அறிவுறுத்தல்!
Tuesday, July 2nd, 2024
லெபனானில் வசிக்கும் தனது நாட்டின் குடிமக்கள் அனைவரும் உடனடியாக வெளியேறும்படி சவுதி அரேபியா அறிவுறுத்தி உள்ளதாக சர்வ தேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேல்-காசா போர் கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் காசாவுக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்கள் செயல்படுகின்றனர். இவர்கள் இஸ்ரேல் எல்லைப்பகுதிகளில் அடிக்கடி தாக்குதலில் ஈடுபடுகின்றனர்.
மேலும் இஸ்ரேலின் வடக்கு பகுதிகளை ஆக்கிரமிக்க போவதாகவும் ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்களையும் முழுமையாக ஒழிக்க இஸ்ரேல் உறுதியளித்துள்ளது.
000
Related posts:
விமான விபத்தில் எவரும் உயிர்தப்பவில்லை!
மக்கள் வங்கியினால் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அல்ரா சவுண்ட் ஸ்கான் இயந்திரம் வழங்கிவைப்பு!
வதந்திகளுக்கு இடம்கொடுக்காது மூன்றாவது தடுப்பூசியை விரைவாக பெற்றுக்கொள்கள் – பொதுமக்களுக்கு பிரதி சு...
|
|
|


