அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – 8 பேர் உயிரிழப்பு!
Friday, February 1st, 2019
சீனாவின் ஜிலின் மாகாணத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சமையல் எரிவாயு கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த குடியிருப்பின் நான்காவது மாடியில் சமையல் எரிவாயு கசிந்து திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் சிக்கி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், 3 பேர் படுகாயம் அடைந்தனர் என்று தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்து குறித்து முதல் கட்ட விசாரணை நடந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
ஜல்லிக்கட்டு விவகாரம்: விரைவில் நல்ல செய்தி-மத்திய அமைச்சர் அனில் தவே!
பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம்!
ஐக்கிய அமீரக இளவரசர் பிரித்தானியாவில் மரணம்!
|
|
|


