அகதிகள் சென்ற படகு கவிழ்ந்ததில் 42 பேர் பலி!
Thursday, April 15th, 2021
ஏமனை சேர்ந்த 60- க்கும் மேற்பட்டோரை ஏற்றிக் கொண்டு ஐரோப்பிய நாடுகளை நோக்கிச் சென்ற படகு ஒன்று திடீரென கவிழ்ந்ததில் 42 பேர் பேர் பரிதாபகரமாக உயிரிழந்தனர்.
இந்த படகு வடகிழக்கு ஆபிரிக்க நாடான ஜிபூட்டி அருகே கடலில் சென்று கொண்டிருந்தபோது விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் ஜிபூட்டி நாட்டின் கடலோர காவல் படையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆனால் அவர்கள் செல்வதற்குள் பெண்கள், சிறுவர்கள் உட்பட 42 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
அத்துடன் நீரில் தத்தளித்துக்கொண்டிருந்த 14 பேரை கடலோர காவல்படையினர் பத்திரமாக மீட்டனர். மேலும் இந்த விபத்தில் சுமார் 10 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.
00
Related posts:
இந்தோனேஷியவில் நிலச்சரிவும்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 19ஆக அதிகரிப்பு!
தடுத்து வைக்கப்பட்டிருந்த 9 மலேசியர்கள் விடுவிப்பு!
புகையிரதம் தடம்புரள்வு - 7 பேர் பலி!
|
|
|


