அகதிகள் சட்டமூத்திற்கு பிரான்ஸ் தேசிய சபை அனுமதி!

சர்ச்சைக்குரிய அகதிகள் சட்டமூத்திற்கு பிரான்ஸ் தேசிய சபை அனுமதி அளித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன்பொருட்டு இடம்பெற்ற வாக்கெடுப்பின் சட்ட மூலத்திற்கு ஆதரவாக 228 வாக்குகளும் எதிராக 139 வாக்குகளும் கிடைக்கப்பபெற்றன. பிரான்ஸிற்கு வருபவர்கள் அகதி அந்தஸ்த்தை பெற்றுக்கொள்வதன் பொருட்டு வழங்கப்பட்டிருந்த காலம் இந்த சட்டமூலத்தின் ஊடாக குறைக்கப்பட்டுள்ளது.
அதுபோல் சட்டவிரோதமாக பிரான்ஸுக்குள் உள்நுழையும் ஏதிலிகளை கைது செய்து தடுத்துவைக்கும் காலமும் இரண்டு மடங்காக அதிகாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் இந்த புதிய சட்டமூலத்திற்கு பிரான்ஸ் மனித உரிமை அமைப்பு எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.
Related posts:
பிரித்தானியாவுக்கு நன்மை தராது - கேமரரூன்!
உலகை அச்சுறுத்தும் கொவிட் -19 : பலி எண்ணிக்கை 1770 ஆக அதிகரிப்பு!
காட்டுத்தீ போல கொரோனா பரவும் – எச்சரிக்கும் அமெரிக்க மருத்துவர் !
|
|