SL vs WI இரண்டாவது டெஸ்ட்டுக்கு மழையினால் இடையூறு!

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் ஆரம்பம் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று ஆரம்பமாகவிருந்தது.
எவ்வாறாயினும் இன்று காலை முதல் காலி பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை இன்னும் குறையவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக போட்டியின் முதல் நாள் ஆட்டம் ஆரம்பமாவதில் தொடர்ந்தும் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
இலங்கை அணித்தலைவர் திமுத் கருணாரத்னவிற்கு இந்தப் போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
ஏனெனில் இந்த இன்னிங்ஸில் டெஸ்ட் கிரிக்கெட்டில் உலக சாதனையொன்றை சமன் செய்யும் வாய்ப்பு திமுத்துக்கு கிடைக்கவுள்ளது.
திமுத் இந்த ஆண்டில் இதுவரை ஏழு டெஸ்ட் அரை சதங்களை பெற்றுள்ளார். மேலும் அவர் இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் மற்றொரு அரை சதத்தை பெற்றுக்கொள்வாராயில், தொடர்ந்து எட்டு டெஸ்ட் அரை சதங்களை பெற்ற எட்டாவது வீரர் என்ற பெயரைத் தனதாக்கிக்கொள்வார்.
000
Related posts:
|
|