ODI மற்றும் T20 உலகக்கிண்ண தொடர்களில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம்!

ஆடவர் உலகக்கிண்ண 2027 மற்றும் 2031ஆம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கையை 14ஆக அதிகரிக்க சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளது.
அத்துடன், 2024 – 2030 ஆண்டுவரை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இடம்பெறவுள்ள இருபதுக்கு20 உலகக்கிண்ண தொடர்களில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கையை 20 ஆக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.
தற்போது உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர்களில் 10 அணிகள் பங்கேற்பதுடன், இருபதுக்கு20 உலகக்கிண்ண தொடர்களில் 16 அணிகள் பங்கேற்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
முகம் கொடுத்த முதல் போட்டியில் தங்க வென்ற யாழ். மாணவன் !
இலங்கை கராத்தே சம்மேளன மாவட்ட மட்டப்போட்டியில் 32 தங்கம், 31 வெள்ளி, 26 வெண்கலம் வென்று மாகாதேவா சிற...
இந்தியா- அவுஸ்திரேலியா தொடர்: ஸ்பாட் பிக்ஸிங் நடந்தது தொடர்பான வீடியோ வெளியானது!
|
|