IPL – 2017 போட்டிக்கான முழுமையான அட்டவணை!

Friday, February 17th, 2017

எதிர்வரும் ஏப்ரல் 5ம் திகதி தொடங்கும் IPL போட்டிக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று(16) வெளியிட்டது.

இதன்படி தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஐதராபாத் சன் ரைசர்சும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் இரவு 8 மணிக்கு மோதுகின்றன. ஏப்.6ம் திகதி நடக்கும் 2-வது லீக்கில் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் சந்திக்கின்றன. போட்டி நடைபெறும் 10 நகரங்களில் ஒன்றாக இந்தூரும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2011-ம் ஆண்டுக்கு பிறகு இந்தூரில் முதல் முறையாக சில IPL ஆட்டங்கள் நடைபெற உள்ளன.

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை போட்டி தொடங்குவதற்கு 10 நாட்களுக்கு முன்பாக அதாவது மே 21ம் திகதி இறுதிப்போட்டி அரங்கேறுகிறது. தொடக்க மற்றும் இறுதி ஆட்டம் நடப்பு சாம்பியனுக்குரிய ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் நடத்தப்படுகிறது.

பங்கேற்கும் 8 அணிகள் உள்ளூர்-வெளியூர் அடிப்படையில் தலா 14 லீக் ஆட்டங்களில் விளையாடும். மொத்தம் 60 ஆட்டங்கள் நடைபெறுகிறது. திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரையிலான நாட்களில் 4 ஆட்டங்கள் மாலையில் (4 மணி) தொடங்கும் வகையில் போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டு இருக்கிறது.

hqdefault

Related posts: