I.P.L. தொடரும் சூதாட்டம்: இரண்டு பேர் கைது!
Tuesday, May 8th, 2018
இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்ட இரண்டு பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியத் தலைநகர், டெல்லியிலுள்ள சக்தி எனும் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் கடந்த 3 ஆம் திகதி இடம்பெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியிலேயே சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 வருடங்களாக நடைபெற்று வரும் ஐ.பி.எல். போட்டித் தொடரில் கடுமையான சட்டதிட்டங்கள் தொடர்ச்சியாகப் பின்பற்றப்பட்டு வந்தாலும் ஒவ்வொரு வருடமும் இவ்வாறான சூதாட்டங்கள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யூரோ கிண்ணம்: இறுதிப் போட்டியில் போர்த்துகலுடன் மோதுவது யார்?
முரளிதரனுக்கு HALL OF FAME விருது!
யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 6 வீர, வீராங்கனைகள் உலக பாடசாலைகள் சதுரங்கப் போட்டியில் விளையாடுவதற்கு த...
|
|
|


