9 நாடுகளுக்கு சர்வதேச பளுதூக்கல் போட்டிகளில் பங்கேற்கத் தடை!

ரஷ்யா, சீனா உள்ளிட்ட 9 நாடுகளுக்கு ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டில் சர்வதேச பளுதூக்கல் போட்டிகளில் பங்கேற்க சர்வதேச பளுதூக்கல் சம்மேளனம் தடை விதித்துள்ளது.
அடுத்த ஓராண்டுக்கு குறித்த நாடுகள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க முடியாது எனவும் சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனம் அறிவித்துள்ளது.
கடந்த 2008 மற்றும் 2012 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற அந்நாட்டு வீரர்/வீராங்கனைகளின் மாதிரிகள் மறுபரிசோதனை செய்யப்பட்ட நிலையில், ஊக்கமருந்து பயன்படுத்தியமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து ரஷ்யா, சீனா, ஆர்மேனியா, அஜர்பைஜான், பெலாரஸ், மால்டோவா, கஜகஸ்தான், துருக்கி, உக்ரைன் உள்ளிட்ட நாடுகள் எதிர்வரும் பளுதூக்கல் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்துள்ளன. உலக சாம்பியன்ஷிப் போட்டியானது அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் எதிர்வரும் நவம்பர் 28 முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|