60 கோடிக்கு சொகுசு விமானம் வாங்கிய கால்பந்து வீரர்!

Sunday, May 1st, 2016

பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ரூ.60 கோடிக்கு சொகுசு விமானம் ஒன்றை வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நெய்மர் கடந்த 2011ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை சுமார் 16 மில்லியன் பவுண்டுகள் வரை வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் சாபாலோ நகர நீதிமன்றம் நெய்மரின் ரூ.310 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்க உத்தரவிட்டது.

இந்நிலையில் அவர் ஷெஸ்னா 680 ரக விமானத்தை பிர் பார்டிசிபகோயஸ் என்ற நிறுவனத்தின் மூலம் அடமானமாக இவ்வளவு பெரிய தொகைக்கு வாங்கியுள்ளதாக பிரபல செய்தித்தாள் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 பேர் வரை பயணம் செய்யக்கூடிய இந்த ஷெஸ்னா 680 ரக விமானம் நடுத்தர வணிக ஜெட் வகையை சேர்ந்தது.

Related posts: