500 கோல்கள் அடித்து சாதனை படைத்த மெஸ்ஸி

Monday, April 18th, 2016

லா லீகா தொடரில் வெலென்சியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் தனது 500வது கோலை அடித்து பார்சிலோனாவின் மெஸ்ஸி சாதனை படைத்துள்ளார்.

லா லீகா தொடரில் ஸ்பெயினின் பார்சிலோனாவின் நடைபெற்ற ஆட்டத்தில் வெலென்சியா மற்றும் பார்சிலோனா எப்.சி. அணிகள் மோதின. இதில் 1-2 என்ற கோல் கணக்கில் வெலென்சியா அணியிடம் பார்சிலோனியா தோல்வியடைந்தது.

எனினும் இந்த ஆட்டத்தில் பார்சிலோனாவின் மெஸ்ஸி அடித்த கோல் சர்வதேச ஆட்டத்தில் அவரது 500வது கோலாக பதிவானது. இதுவரை 632 போட்டிகளில் விளையாடி இந்த சாதனையை மெஸ்ஸி படைத்துள்ளார். இதுவரை அடித்துள்ள கோல்களில் 80 சதவீதம்; அதாவது 406 கோல்களை இடது கால் மூலமாகவே மெஸ்ஸி அடித்துள்ளார். 71 கோல்களை வலது கால்மூலமாகவும், 21 கோல்களை தலையை முட்டியும் அவர் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: