23 வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்தன !

Monday, February 26th, 2018

தென்கொரியாவில் இடம்பெற்று வந்த 23வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நேற்று கோலாகலமாக நிறைவடைந்தன.

2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தென்கொரியாவின் பியாங்சங் நகரில் கடந்த 8ம் திகதி ஆரம்பமாகின.  இதில் 93 நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்துகொண்டனர்.

தடைகள் காரணமாக, ரஷ்ய வீரர்கள் தனிப்பட்ட போட்டியாளர்களாக களமிறங்கினர்.  15 வகையான விளையாட்டுகள் இருபாலருக்கும் நடத்தப்பட்டன. இந்த போட்டியில், சுமார் 2 ஆயிரத்து 952 வீர வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இதில், நோர்வே 14 தங்கம், 14 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 39 பதக்கங்களுடன் முதலிடத்தை பிடித்தது.  அதைத்தொடர்ந்து ஜெர்மனி 14 தங்கம், 10 வெள்ளி, 7 வெண்கலம் என 31 பதக்கங்களை வென்று இரண்டாவது இடத்தை பிடித்தது.

11 தங்கம், 8 வெள்ளி, 10 வெண்கலப் பதக்கங்களை வென்று கனடா மூன்றாவது இடத்தில் உள்ளது. அமெரிக்கா நான்காவது இடத்தையும், நெதர்லாந்து ஐந்தாவது இடத்தையும் பிடித்தன.  அத்துடன், இறுதி நிகழ்வில் அமெரிக்கா, வடகொரியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டனர்.

Related posts: