21 ஆண்டுகால வக்கார் யூனுஸ் சாதனையை தகர்த்த அஸ்வின்!

Monday, September 26th, 2016

21 ஆண்டுகால வக்கார் யூனுஸ் சாதனையை தகர்த்த அஸ்வின்,முரளியையும் முந்தினார். இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னணி சூழல் பந்து வீச்சாளரான அஸ்வின் ,வேகமான 200 டெஸ்ட் விக்கெட் சாதனையை படைத்த இரண்டாவது வீரரானார்.

கான்பூர் மைதானத்தில் இந்திய, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்த சாதனையை படைத்துள்ளார்.

இந்த டெஸ்ட்டுக்கு முன்னதாக 36 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அஸ்வின், 193 டெஸ்ட் விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய நிலையில் கான்பூர் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும்,2 வது இன்னிங்ஸில் இதுவரை 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இந்த சாதனை படைத்தார்.

ஆஸ்திரேலியாவின் டென்னிஸ் லில்லி, மற்றும் பாகிஸ்தானின் வாக்கர் யூனுஸ் ஆகியோர் 38 போட்டிகளில் நிகழ்த்திய சாதனையை முறியடித்துள்ளார். ஆசியாவின் ஒரு பந்துவீச்சாளர் வேகமான 200 விக்கெட் எனும் சாதனையை பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனுஸ் 1995 இல் படைத்து, இந்த சாதனையை 21 ஆண்டுகளாக தன்வசம் வைத்திருந்த நிலையில் அதனை அஸ்வின் இப்போது முறியடித்துள்ளார்.

அத்தோடு 800 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனையை தன்வசம் வைத்துள்ள இலங்கையின் முரளிக்கு 200 விக்கெட்டுகளை கைப்பற்ற 42 போட்டிகள் தேவைப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இந்தப் பட்டியலில் 36 டெஸ்ட்டில் 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஆஸ்திரேலியாவின் சூழல் பந்து வீச்சாளர் கிலர்றி கிரிம்மேட் 80 ஆண்டுகளாக இந்து சாதனையை தன்வசம் வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1469944682-6069

Related posts: