2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டும் உள்வாங்கப்படும் – சர்வதேச ஊடகங்கள் தகவல்!

Tuesday, October 17th, 2023

2028 ஆம் ஆண்டு லொஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டும் உள்வாங்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் உறுதிபடுத்தியுள்ளன

சர்வதேச ஒலிம்பிக் குழு (IOC) இந்த உத்தியோகப்பூர்வ தகவலை தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஒலிம்பிக் போட்டிகளில் ஒரு பகுதியாக இனி கிரிக்கெட்டும் விளையாடப்படும்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

கடந்த வாரம் லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் குழு, 2028 ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டை உள்வாங்க பரிந்துரைத்தது.

இந்நிலையில், நேற்று மும்பையில் நடந்த 141 ஆவது சர்வதேச ஒலிம்பிக் குழுவின் அமர்வின் போது, அந்த கோரிக்கைக்கு முறைப்படி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் குறித்து ஐசிசி மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

000

Related posts: