2023 ஒருநாள் உலகக்கிண்ணம் – உத்தியோகபூர்வ சின்னம் வெளியானது!

Monday, April 3rd, 2023

2023 ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஒருநாள் சர்வதேச ஆடவர் உலகக் கிண்ணத்துக்கான உத்தியோகபூர்வ சின்னத்தை இன்று சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ளது.

உலகக் கிண்ணத் தொடரின்போது ரசிகர்கள் வெளிப்படுத்தும் நவரசங்கள் எனப்படும் ஒன்பது உணர்ச்சிகள், குறியீடுகள் மற்றும் வண்ணங்களின் கலவையாக உலகக் கிண்ணத்தின் சின்னம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பத்து அணிகளில் ஏழு அணிகள் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023க்கான தகுதியை உறுதிசெய்துள்ளன.

கிரிக்கெட் உலகக் கிண்ண சூப்பர் லீக்கில் எட்டாவது இடத்தைப் பிடிப்பவர், எட்டாவதாக தகுதிபெறும்.

இறுதி இரண்டு அணிகள் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெறும் கிரிக்கெட் உலகக் கிண்ண தகுதிச் சுற்றில் முடிவு செய்யப்படும்.

இறுதி மூன்று இடங்களுக்கு அணிகள் தத்தளித்து வரும் நிலையில், அவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில், இந்த சின்னத்தை வெளியிட்டுள்ளதாக ஐசிசி தலைமை நிர்வாகி ஜியோஃப் அலார்டிஸ் கூறுகிறார்.

“ஐசிசி ஆடவர் கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2023 இன் சின்னத்தை வெளிப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், நவரசத்தின் மூலம் கிரிக்கெட், உலகெங்கிலும் உள்ள ரசிகர்களுக்கு இன்பத்தையும் வெளிப்படுத்துகிறது.

மிகப்பெரிய கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை வழங்குவதற்காக ஆறு மாதங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது” என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: