2018 ஆம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு ஜெர்மனி, இங்கிலாந்து தகுதி!

2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகள் தகுதி பெற்றுள்ளன.
2018 உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் கண்டங்கள் வாரியாக நடைபெற்று வருகின்றது.
ஐரோப்பிய கண்டத்திற்கான தகுதிச்சுற்று ஆட்டங்களில் நேற்று (05) நடந்த போட்டியில் ஜெர்மனி 3-1 என்ற கணக்கில் வடக்கு அயர்லாந்தை தோற்கடித்தது.
மற்றொரு போட்டியில் இங்கிலாந்து 1-0 என்ற கோல் கணக்கில் சுலோவாக்கியாவை வீழ்த்தியது. இதுவரை நடந்த போட்டிகளின் முடிவில் ஜெர்மனி 9 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் வென்று 27 புள்ளிகளுடன் தனது பிரிவில் முதலிடத்தில் உள்ளது.
இங்கிலாந்து 9 போட்டிகளில் விளையாடி 7 இல் வெற்றி பெற்றுள்ளது. 2 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி நிறைவுக்கு வந்தன. இதன் அடிப்படையில் 23 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இதன் மூலம் ஜெர்மனி, இங்கிலாந்து அணிகள் உலகக்கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
Related posts:
|
|