2016 ஒலிம்பிக் போட்டிக்கான ‘கவுன்ட் டவுன்’ ஆரம்பம்!

Thursday, July 7th, 2016

பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் அடுத்த மாதம் 5ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. 308 தங்கப் பதக்க வேட்டைக்கான ஒரு மாத ‘கவுன்ட்டவுன்’ நேற்றுமுன்தினம் ஆரம்பமானது.

மொத்தம் 206 நாடுகளில் இருந்து 10 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இந்த ஒலிம்பிக் திருவிழாவில் கலந்து கொள்ள உள்ளனர். 42 வகையான விளையாட்டுகளில் 306 போட்டிகள் நடைபெற உள்ளன.

இந்த போட்டிகள் அனைத்தும் சாவோ பாலோ, பெலோ ஹாரிசான்டி, சல்வேடார், பிரேசிலா, மனாஸ் ஆகிய நகரங்களில் உள்ள 37 இடங்களில் நடத்தப்படுகிறன்றன.

தென் அமெரிக்க நாடுகளில் ஒலிம்பிக் போட்டி நடத்தப்படுவது இதுவே முதன் முறையாகும். மேலும் அதிக அளவிலான நாடுகளும், அதிக அளவிலான வீரர், வீராங்கனைகளும் பங்கேற்கும் போட்டியாக ரியோ ஒலிம்பிக் அமைய உள்ளது.

ஒலிம்பிக்கில் கோசாவோ, தெற்கு சுடான் ஆகிய நாடுகள் முதன் முறையாக களமிறங்குகிறது. மேலும் இந்த முறை ரக்பி செவன்ஸ், கோல்ப் ஆகியவை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் 308 தங்கப் பதக்க வேட்டைக்கான ஒரு மாத ‘கவுன்ட்டவுன்’ நேற்றுமுன்தினம் ஆரம்பமானது. அதிகரிக்கும் குற்றச் செயல்கள், நிதி பற்றாக்குறை, அரசியல் நெருக்கடி, சம்பள உயர்வு கோரி அரசு ஊழியர்களின் போராட்டங்கள், ஜிகா வைரஸ் தாக்குல் அபாயம் ஆகியவற்றுக்கிடையே இந்த ‘2016 ரியோ ஒலிம்பிக் கவுன்ட் டவுன்’ தொடங்கப்பட்டுள்ளது.

இந்தப் போட்டிகளை காண 5 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2009-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்தும் உரிமையை பெற்ற ரியோ நகரம் கடந்த 8 ஆண்டுகளாக போட்டிக்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து முடித்துள்ளது.

தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக ஒலிம்பிக் போட்டிக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 85 ஆயிரம் பொலிஸார் ஒலிம்பிக் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இது 2012 ஒலிம்பிக் போட்டியில் பணியாற்றிய பொலிஸாரின் எண்ணிக்கையைவிட இருமடங்கு அதிகமாகும்.

Related posts: