20 பந்தில் சதம் – சஹா சாதனை!
Monday, March 26th, 2018
இந்திய டெஸ்ட் அணியில் விக்கெட் கீப்பராக செயற்படும் வ்ரிடிமான் சஹா 20 பந்தில் சதம் அடித்து உலக சாதனைப் படைத்துள்ளார்
இதில் 16 சிக்சர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும்
இதன்படி அவர் ஒரு பந்துக்கு சராசரியாக 5.1 ஓட்டங்களை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேற்கு வங்காள மாநிலத்தில் ஜேசி முகர்ஜி டிராபி டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் ஆட்டம் ஒன்றிலேயே அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இதன்மூலம் இருபதுக்கு இருபது கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் குறைந்த பந்தில் அதிக சதம் அடித்த வீரர்கள் என்ற பெருமையை வ்ரிடிமான் சஹா பெற்றுள்ளார். இதில் ஒரு ஓவரில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை விளாசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது
Related posts:
கோலாகலமாக தொடங்கியது ரியோ ஒலிம்பிக் 2016
சுரேஷ் ரெய்னாவிற்கு T20 தொடரில் வாய்ப்பு!
உடல்நிலை தற்போது சற்று பலவீனமாக உள்ளது - எம்.எஸ்.தோனியின் கருத்தால் ரசிகர் அதிர்ச்சி!
|
|
|


