19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் 16 நாடுகள் நான்கு குழுக்களில் போட்டியிடும்!

Monday, August 21st, 2017

நியூ­ஸி­லாந்தில் அடுத்த வருட முற்­ப­கு­தியில் நடை­பெ­ற­வுள்ள 16 நாடு­க­ளுக்கு இடை­யி­லான 19 வய­துக்­குட்­பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டிக்­கு­ரிய கால அட்­டவ­ணையை சர்­வ­தேச கிரிக்கெட் பேரவை நேற்று வெளி­யிட்­டது.

நடப்பு சம்­பியன் மேற்­கிந்­தியத் தீவு­களும் போட்­டி­களை முன்­னின்று நடத்தும் வர­வேற்பு நாடான நியூ­ஸி­லாந்தும் ஆரம்பப் போட்­டியில் மோத­வுள்­ளன. ஏ குழு­வுக்­கான இப் போட்டி பக­லி­ரவுப் போட்­டி­யாக டௌரங்கா பே ஓவல் விளை­யாட்­ட­ரங்கில் 2018 ஜன­வரி 13ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது.

ஆப்­கா­னிஸ்­தானும் அயர்­லாந்தும் அண்­மையில் புதி­தாக டெஸ்ட் அந்­தஸ்து பெற்­ற­தற்கு முன்­ப­தாக டெஸ்ட் அந்­தஸ்து பெற்­றி­ருந்த பத்து நாடுகள் இயல்­பா­கவே இந்த சுற்றுப் போட்­டியில் நேர­டி­யாக விளை­யாடத் தகு­தி­பெற்­றி­ருந்­தன.

இந்த பத்து நாடு­க­ளுடன் இணை அங்­கத்­துவ நாடு­களில் முன்­னிலை வகித்த நமி­பி­யாவும் நேரடி தகு­தியைப் பெற்­றுக்­கொண்­டி­ருந்­தது.

இந்த 11 நாடு­க­ளுடன் ஐந்து பிராந்­தி­யங்­களில் நடை­பெற்ற தகு­திகாண் சுற்­று­களில் சம்­பி­யன்­க­ளான ஆப்­கா­னிஸ்தான், கனடா, அயர்­லாந்து, கென்யா, பப்­புவா நியூ கினி ஆகிய நாடு­களும் 19 வய­துக்­குட்­பட்ட உலகக் கிண்ணப் போட்­டி­களில் விளை­யாடும் தகு­தியைப் பெற்­றன.

2017 ஜன­வரி 13ஆம் திக­தி­யி­லி­ருந்து பெப்­ர­வரி 3ஆம் திகதி வரை நடை­பெ­ற­வுள்ள இப் போட்­டியில் நியூ­ஸி­லாந்து, மேற்­கிந்­தியத் தீவு­க­ளுடன் ஏ குழுவில் தென் ஆபி­ரிக்­காவும் ஆபி­ரிக்க பிராந்­திய தகு­தி­யாளர் கென்­யாவும் இடம்­பெ­று­கின்­றன.

பி குழுவில் அவுஸ்­தி­ரே­லியா, இந்­தியா, ஸிம்­பாப்வே, கிழக்கு ஆசிய பசுபிக் தகு­தி­யாளர் பப்­புவா நியூ கினி என்­பன உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன.

சி குழுவில் பங்­க­ளாதேஷ், கனடா, இங்­கி­லாந்து, நமி­பியா ஆகிய நாடு­களும் டி குழுவில் இரண்டு தட­வைகள் சம்­பி­னான பாகிஸ்தான், இலங்கை, ஆசிய தகு­தி­யாளர் ஆப்­கா­னிஸ்தான், ஐரோப்­பிய தகு­தி­யாளர் அயர்­லாந்து ஆகிய நாடு­களும் இடம்­பெ­று­கின்­றன.

ஒவ்­வொரு குழு­விலும் முத­லி­ரண்டு இடங்­களைப் பெறும் நாடுகள் சுப்பர் லீக் சுற்றில் விளை­யாட தகு­தி­பெறும். மற்­றைய எட்டு நாடுகள் கோப்பைப் பிரிவு சுற்றில் விள­யைாடும். போட்­டிகள் க்றைஸ்ட்சேர்ச், குவீன்ஸ்டவுன், டௌரங்கா, வாங்கரெய் ஆகிய நகரங்களிலுள்ள ஏழு மைதானங்களில் நடைபெறும்.

கால் இறுதிகள், அரை இறுதிகள், சுப்பர் லீக் இறுதிப் போட்டி உட்பட 20 போட்டிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளன.

Related posts: