16 வயதுக்குட்பட்டோர் அணியில் சாதனை வீரரை ஓரம்கட்டி சச்சின் மகனுக்கு வாய்ப்பு!
Wednesday, June 1st, 2016
இந்தியா – மும்பை – கல்யாணில் நடந்த பாடசாலை அணிகளுக்கான 16 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் போட்டியில் கே.சி.காந்தி மேல்நிலை பாடசாலை மாணவர் பிரணவ் தனவாடே 1,009 ஓட்டங்கள் குவித்து உலக சாதனை படைத்தார்.
பண்டாரி கிண்ணத்திற்கான போட்டியில் ஆர்.கே.காந்தி பாடசாலைக்காக ஆடிய அவர் ஆர்ய குருகுல பாடசாலைக்கு எதிராக இந்த சாதனையை புரிந்தார். 10 ஆம் வகுப்பு மாணவரான பிரணவ் 396 நிமிடங்கள் களத்தில் நின்று 327 பந்துகளில் 1009 ஓட்டங்களை குவித்தார். இதில் 129, 4 ஓட்டங்களும், 59, 6 ஓட்டங்களும் அடங்கும். இதன் மூலம் அவர் 117 ஆண்டுகால சாதனையை முறியடித்தார்.
இதுவரை அங்கீகரிக்கப்ட்ட போட்டிகளில் பிரிட்டனை சேர்ந்த ஏ.ஈ.ஜே. கோலின்ஸ் பெற்றிருந்த 628 ஓட்டங்கள் உலக சாதனையாக இருந்தது. கடந்த 1899 ஆம் ஆண்டு இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது. ஆனால் இந்த சாதனை நிகழ்த்திய பிரணவ்வை 16 வயதுக்குட்பட்டோருக்கான மேற்கு பிராந்திய கிரிக்கெட் அணியில் சேர்க்கவில்லை.
ஆனால் சாதனை எதுவும் நிகழ்த்தாத சச்சினின் அர்ஜூன் டெண்டுல்கருக்கு இடம் கிடைத்துள்ளது. இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் படு சூடாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
Related posts:
|
|
|


