14ஆவது பட்டத்தை வென்ற சானியா இணை!

ரோம் நகரில் நடைபெற்ற இத்தாலி ஓபன் டென்னிஸில் செரீனா வில்லியம்ஸ் சம்பியன் பட்டம் வென்றார். பெண்கள் இரட்டையர் பிரிவில் சானியா- –ஹிங் கிஸ் ஜோடி வெற்றி பெற்று 14ஆ-வது பட்டத்தை ருசித்தது.
பெண்கள் இரட்டையர் பிரிவில் சானியா மிர்ஷா –ஹிங்கிஸ் ஜோடி, மகரோவா வெஸ்னினா ஜோடியை எதிர்கொண்டது. இதன் முதல் செட்டை சானியா ஜோடி 6–-1 என எளிதில் கைப்பற்றியது. ஆனால், எதிர்ஜோடி 2ஆ-வது செட் டில் சுதாகரித்துக்கொண்டு விளையாடியது. இதனால் சானியா ஜோடி அந்த செட்டை 6–-7 என இழந்தது.
ஆனால், வெற்றி ஜோடியான சானியா- – ஹிங்கிஸ் ஜோடி 3ஆ-வது செட்டில் சிறப்பாக விளையாடி அந்த செட்டை 10–-3 எனக் கைப்பற்றியது. இதன்மூலம் சானியா ஹிங்கிஸ் ஜோடி 14-ஆவது பட்டத்தை வென்றுள்ளது.
Related posts:
கோஹ்லி - டிவில்லியர்ஸ் மிரட்டல் சதம் - 144 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெங்களூர் வெற்றி!
மீண்டும் புதிய சாதனை படைத்தார் ஆசிகா!
சிறந்த பந்து வீச்சாளருக்கான விருதை வென்ற லசித் !
|
|