117 ஆண்டு சாதனை தகர்ப்பு: புதிய உலக சாதனை படைத்தார் சமித்!

Wednesday, December 28th, 2016

117 ஆண்டு உலக சாதனையை முறியடித்து குஜராத் கிரிக்கெட் வீரர் சமித் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

குஜராத், ஒடிசா ஆகிய உள்ளூர் அணிகளுக்கு எதிரான ரஞ்சிக் கோப்பை காலிறுதிப் போட்டி ஜெய்ப்பூர் சவாய் மான் சிங் மைதானத்தில் நடந்தது.

இந்த போட்டியில் குஜராத் வீரரான சமித் அபாரமாக ஆடி 723 பந்துகளில் முச்சதம் அதாவது 359 ஒட்டங்கள் (45 பவுண்டரி, 1 சிக்ஸ்) எடுத்திருந்தார்.

அபாரமாக ஆடிய சமித் தொடக்க ஆட்டநாயகனாக களமிறங்கி கடைசிவரை ஆட்டமிழக்காமல் அதிக ஓட்டங்கள் எடுத்து உலக சாதனை புரிந்துள்ளார்.

இதுவரை, 117 ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது 1899 ஆண்டு சாமர்செட் அணிக்கு எதிராக சர்ரே அணி தொடக்க வீரர் பாபி அபெல் ஆட்டமிழக்காமல் 357 ஓட்டங்கள் விளாசியதே உலக சாதனையாக இருந்து வந்தது.

இந்நிலையில் ஒரு நூற்றாண்டுக்கு மேலாக எவராலும் எட்டிப்பிடிக்க முடியாமல் இருந்த இந்த சாதனையை தற்போது குஜராத் வீரர் சமித் முறியடித்து சாதனையாளராக வலம் வருகிறார்.

மேலும், பிரியங் பன்சலுக்குப்பின், ரஞ்சியில் முச்சதம் அடித்த இரண்டாவது குஜராத் வீரர் என்ற சாதனையை சமித் எட்டியதுடன் அதிக ஒட்டங்கள் குவித்தவர்களின் பட்டியலில் 5 வது இடம் பிடித்துள்ளார்.

மேலும், இன்னிங்ஸில் அதிக நேரம் அவுட்டாகாமல் துடுப்பெடுத்தாடியவர்களின் பட்டியலில் சமித் (964 நிமிடங்கள்) மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து சமித் கோஹெல் கூறியதாவது, நான் விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் வருமான வரித் துறை மற்றும் தேனா வங்கியில் வேலை வாய்ப்பு கோரி விண்ணப்பித்துள்ளேன், இந்த உலக சாதனை அதற்கு உதவும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.

625.0.560.350.160.300.053.800.668.160.90

Related posts: