100 மீற்றர் தடை தாண்டல் கெனி ஹரிசன் புதிய சாதனை!
Sunday, July 24th, 2016
அமெரிக்க மெய்வல்லுநர் வீராங்கனையான கெனி ஹரிசன், 100 மீற்றர் தடை தாண்டல் ஓட்டத்தில் உலக சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
லண்டன் டயமன் லீக் போட்டிகளில் பங்கேற்ற கெனி ஹரிசன், 100 மீற்றர் தடைதாண்டல் ஓட்டத்தில் 12 தசம் 20 செக்கன்களில் போட்டித் தூரத்தை நிறைவுசெய்தார்.
23 வயதான ஹரிசன், இவ்வாண்டின் அதிவேக ஓட்டவீராங்கனையாக ஏற்கனவே பதிவாகியிருந்தார்.
எவ்வாறாயினும் அமெரிக்காவில் நடைபெற்ற ஒத்திகை ஓட்டங்களில் ஆறாவது இடத்தை பெற்றிருந்த ஹரிசன், ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்திருந்தார்.
பல்கேரியாவின் யோர்தென்கா டொங்கோவா 1988 ஆம் ஆண்டு 100 மீற்றர் தடைதாண்டல் ஓட்டத் தூரத்தை 12 தசம் 21 செக்கனில் கடந்து சாதனை நிலைநாட்டியிருந்தார்.
இந்த சாதனையை முறித்து, முதலிடத்தை பெற்ற கெனி ஹரிசன் 100 மீற்றர் தடை தாண்டல் ஒட்ட சாதனையை தன்வசப்படுத்தியுள்ளார்.


Related posts:
அப்ரிடிக்கு வாழ்த்துச் சொன்ன ஜெயசூர்யா
பார்சிலோனாவுக்கு எதிரான அரையிறுதியில் லிவர்பூல் அணியின் நட்சத்திர வீரர் முகமது சாலா வெளியேற்றம்!
ஆடுகளங்கள் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ள குமார் சங்கக்கார!
|
|
|


