ICC தலைவர்-ஜனாதிபதி மைத்திரி சந்திப்பு!

சர்வதேச கிரிக்கட் பேரவையின் (ICC) தலைவர் சஷான்க் மனோகர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார் குறித்த சந்திப்பானது ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை கிரிக்கட்டின் எதிர்காலத்திற்காக தனது பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கு மேற்கொண்ட சுற்றுப்பயணத்திற்காக சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவருக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, அரசியல் தலையீடு மற்றும் அழுத்தங்கள் இல்லாமல் விளையாட்டை தொடர வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளதாகவும் குறித்த ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
Related posts:
தென்னாபிரிக்க தொடரில் இருந்து நீக்கப்பட்டார் மாலிங்க!
2011 உலக கிண்ணி போட்டியில் பிரதான பிரச்சினை மத்யூஸ் : முன்னாள் வீரர் அரவிந்த!
போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகளுடன் தொடர்புடைய பொலிசார் தொடர்பில் கடுமையான சட்ட நடவடிக்கை - பொலிஸ் ...
|
|