47 ஆண்டுகளுக்கு பிறகு அவுஸ்திரேலிய திரும்பும் கிண்ணம்!

Tuesday, September 17th, 2019


இங்கிலாந்து, அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகளை கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் 2-2 என சமனில் முடிந்தது. 47 ஆண்டுகளுக்கு பிறகு ஆஷஸ் டெஸ்ட் தொடரில் வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்டில் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.

அதன் படி முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 294 ஓட்டங்கள் எடுத்தது. இதனையடுத்து, முதல் இன்னிங்சில் விளையாடிய அவுஸ்திரேலிய அணி 225 ஓட்டங்களுக்கு சுருண்டது.

69 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்து அணி 329 ஓட்டங்கள் எடுத்தது. இதன் மூலம் 399 ஓட்டங்களை வெற்றி இலக்காக அவுஸ்திரேலிய அணிக்கு நிர்ணயித்தது.

399 இலக்காக கொண்டு களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி வீரர்கள் இங்கிலாந்தின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்ததடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். இருந்த போதும், மேத்யூ வேட் பொறுப்பாக ஆடி சதம் விளாசினார். ஆனால், சரிவில் இருந்து அணியை அவரால் மீட்க முடியவில்லை.

இறுதியில் 263 ஒட்டங்களுக்கு அவுஸ்திரேலியா சுருண்டது. இதன் மூலம் 135 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றிபெற்றது.

5 போட்டிகளை கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் 2-2 என சமனில் முடிந்தது. 1972-க்குப் பின் 47 ஆண்டுகள் கழித்து ஆஷஸ் டெஸ்ட் தொடர் வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிந்துள்ளது.

தொடர் நாயகனாக அவுஸ்திரேலிய தரப்பில் ஸ்மித், இங்கிலாந்து தரப்பில் பென் ஸ்டோக்ஸ் தெரிவு செய்யப்பட்டனர். அதுமட்டுமின்றி, சிறந்த ஒட்டுமொத்த வீரருக்கான காம்ப்டன்-மில்லர் பதக்கத்தை ஸ்மித் வென்றார். முதல் இன்னிங்கில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தியதற்காக ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்படுகிறது.

தொடர் சமனில் முடிவடைந்த நிலையில் முன்னாள் சாம்பியனான அவுஸ்திரேலிய அணி ஆஷஸ் கிண்ணத்தை தங்கள் நாட்டிற்கே மீண்டும் எடுத்துச்செல்கிறது

Related posts: