மலிங்கவுக்கு மாற்றீடாக ஜெரோம் டெய்லர்!
Thursday, April 28th, 2016
மும்பை இந்தியன்ஸ் அணியில் இலங்கை பந்துவீச்சாளர் மலிங்காவுக்கு பதிலாக மேற்கிந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜெரோம் டெய்லர் சேர்க்கப்பட்டுள்ளார்.
இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா நீண்டநாட்களாக முழங்கால் காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார்.
சமீபத்தில் முடிவடைந்த டி20 உலகக்கிண்ண போட்டியிலும் அவர் விளையாடவில்லை. காயம் குணமடைந்து மும்பை அணிக்காக விளையாடுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், மருத்துவ பரிசோதனையில் தேர்ச்சியடையாததை அடுத்து ஐ.பி.எல். தொடரில் இருந்து அவர் விலகிவிட்டார்.
இந்நிலையில் பி.சி.சி.ஐ.வெளியிட்டுள்ள அறிக்கையில், காயம் அடைந்த மலிங்காவிற்கு பதிலாக மும்பை அணியில் மேற்கிந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜெரோம் டெய்லரை சேர்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
கோஹ்லியின் மூளை மங்கிவிட்டது - அவுஸ்திரேலிய வீரர் கடும் தாக்கு!
அடுத்த ஐ.பி.எல் தொடரில் அணிக்கு 5 வீரர்களை தக்கவைக்க அனுமதி!
அரையிறுதி வாய்ப்பை நழுவவிட்ட இலங்கை!
|
|
|


