கோஹ்லியின் மூளை மங்கிவிட்டது – அவுஸ்திரேலிய வீரர் கடும் தாக்கு!

Monday, March 6th, 2017

இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லியின் மூளை மங்கிவிட்டது, அவரின் எதிர்மறையான சிந்தனை மற்ற வீரர்களையும் கெடுத்துவிடுகிறது என அவுஸ்திரேலிய முன்னாள் அணித்தலைவரும், தேர்வாளருமான மார்க் வாக் கூறியுள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த மார்க் வாக், விராட் கோஹ்லி மனதளவில் பதற்றத்தில் உள்ளார் என கடந்த முறை எல்.பி.டபிள்யூ ஆன முறையை பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம்.

பெங்களூர் டெஸ்டில் இந்தியாவின் செயல்பாடு, புனே டெஸ்ட் தோல்விக்குப் பிறகு இந்திய அணித்தலைவர் கூறியதற்கு எதிர்மறையாக உள்ளது. கோஹ்லியின் மூளை மங்கிவிட்டது. அதிக அளவு நோக்கத்துடன் இந்த போட்டியில் விளையாட வேண்டும் என கோஹ்லி கூறியிருந்தார். ஆனால், இப்படி விளையாடக்கூடாது என்பது அவர் முக்கியமான காரணமாக இருந்து விட்டார்.

கோஹ்லி எதிர்மறையான எண்ணத்துடன் சிந்தித்துக் கொண்டிருக்கிறார். ஒரு துடுப்பாட்டகாரர் இப்படி நினைக்கவே கூடாது. அது அவரது சக அணி வீரர்களையும் கெடுத்துவிடுகிறது என கூறியுள்ளார்.

Related posts: