கிரிக்கெட் மீது அன்பு வைத்திருந்தவரை இழந்து விட்டோம் – குமார் சங்ககார!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் மேலாளரும் பல வீரர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவருமான மைக்கேல் டி ஜோய்சாவின் மறைவுக்கு குமார் சங்ககாரா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் மேலாளராக இருந்தவர் மைக்கேல் டி ஜோய்சா. 72 வயதான இவர் நேற்று கொழும்புவில் காலமானார்.
திங்கட்கிழமை அவருக்கு 73வது பிறந்தநாள் வரவிருந்த நிலையிலேயே அவரின் உயிர் பிரிந்துள்ளது. இலங்கை கிரிக்கெட் அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடிய பல முக்கிய வீரர்களின் வளர்ச்சிக்கு மைக்கேல் உறுதுணையாக இருந்தவர் ஆவார்.
அவரின் மறைவுக்கு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில் ஜாம்பவான் குமார் சங்ககாராவும் இது தொடர்பில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில், மைக்கேலின் திடீர் மறைவால் இலங்கை கிரிக்கெட் மீது அன்பு கொண்ட ஒருவரை இழந்துள்ளோம்.
எல்லாவற்றுக்கும் மேலாக நல்ல நண்பரை இழந்துள்ளோம்.உதவி தேவைப்படுகிறவர்களுக்கு உதவ மைக்கேல் எப்போதும் தயாராக இருப்பார், அவரை miss செய்வேன் என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
Related posts:
|
|