கால் இறுதிக்கு 10 முறை தகுதிக்கு பெற்ற முதல் வீரர் ஜோகோவிச் !

Wednesday, June 5th, 2019

கிராண்ட்ஸ்லாம் போட்டியில் தொடர்ச்சியாக 10 முறை கால் இறுதிக்கு தகுதி பெற்ற முதல் வீரர் என்ற பெருமையை ஜோகோவிச் பெற்றுள்ளார்.

கிராண்ட்ஸ்லாம் போட்டி அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி தற்போது பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 4-வது சுற்று ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீரரான செர்பியா நாட்டை சேர்ந்த நோவக் ஜோகோவிச், ஜெர்மனி நாட்டு வீரரான ஜான் லினார்ட்டை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 6-3, 6-2, 6-2 என்ற நேர்செட்டில் ஜான் லினார்ட்டை எளிதில் தோற்கடித்து கால் இறுதிக்கு முன்னேறியுள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் பிரெஞ்ச் ஓபன் போட்டியில் தொடர்ச்சியாக 10 முறை கால் இறுதிக்கு தகுதி பெற்ற முதல் வீரர் என்ற பெருமையை ஜோகோவிச் தனதாக்கினார்.

இந்த ஆண்டில் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் இதுவரை ஜோகோவிச் ஒரு செட்டை கூட இழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க தகவலாகும்.

Related posts: