ஐபிஎல் தொடர்: மும்பை அணி வெற்றி!
Friday, April 19th, 2019
டெல்லியில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி மும்பை அணி 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரின் 34-வது லீக் ஆட்டம் நேற்று இரவு 8 மணிக்கு டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது.
இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி தலைவர் ரோகித் சர்மா துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார். இதையடுத்து, களமிறங்கிய மும்பை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 168 ஓட்டங்கள் எடுத்தது.
பின்னர் 169 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய டெல்லி அணி 20 ஒவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 128 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
இதையடுத்து மும்பை அணி 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் மும்பை வீரர் பாண்டியா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
Related posts:
வீரர்கள் ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதியானது!
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டி ஆரம்பம்!
5 விக்கட்டுக்களால் வென்றது சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணி!
|
|
|


