இந்திய வீரருக்கு அப்ரிடி பாராட்டு!
Friday, September 20th, 2019
பாகிஸ்தான் முன்னாள் அதிரடி துடுப்பாட்டுவீரர் சகீத் அப்ரிடி இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லியை பாராட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
குறித்த டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, விராட் கோஹ்லிக்கு எனது பாராட்டுக்கள், உண்மையிலேயே அவர் ஒரு சிறந்த வீரர் ஆவார். அவர் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள். உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு தனது அபாரமான ஆட்டம் மூலம் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கோஹ்லி மீண்டும் அனைத்து வகையான சர்வதேச போட்டியில் 50 ஓட்டங்களுக்கு மேல் சராசரியை தொட்டுள்ளார். டெஸ்டில் 53.14, ஒரு நாள் போட்டி 60.31, 20 ஓவரில் 50.85 ஆக சராசரி இருக்கிறது.
Related posts:
ஐ.பி.எல் ஏலம் டிசம்பர் 18 ஆம் திகதி !
வெற்றிக்களிப்புடன் ஓய்வுபெற்றார் மாலிங்க!
மீண்டும் இலங்கை அணியில் குசல் ஜனித் பெரேரா!
|
|
|


