ஸ்லோவேனியா கால்பந்தாட்ட கூட்டமைப்பின் தலைவர் யு.ஈ.எப்.ஏ-இன் புதிய தலைவராக தெரிவு!

Friday, September 16th, 2016

ஐரோப்பாவின் கால்பந்தாட்ட நிர்வாக அமைப்பான புதிய தலைவராக அலெக்ஸான்டர் சீபெரின் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஸ்லோவேனியா கால்பந்தாட்ட கூட்டமைப்பின் தலைவரான சீபெரின், கிரேக்கத்தின் தலைநகரான ஏதென்ஸில் இடம்பெற்ற காங்கிரஸில் 42 வாக்குகளைப் பெற்று, 29 வாக்குகளைப் பெற்ற நெதர்லாந்தின் மைக்கல் வான் பிறாக்கைத் தோற்கடித்தே, புதிய தலைவராக தெரிவாகியிருந்தார்.

கால்பந்து சம்பந்தமான அனைத்து நடவடிக்கைகளிலும் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தனது பதவியிலிருந்து இராஜினாமாச் செய்த பிரான்ஸின் முன்னாள் கால்பந்தாட்ட வீரரான மைக்கல் பிளட்டினியையே, 48 வயதான சீபெரின் பிரதியீடு செய்கிறார். பிளட்டினியின் எஞ்சிய பதவிக்காலம், அதாவது 2019ஆம் ஆண்டு வரை சீபெரின் பதவியில் இருப்பார்.

article_1473860527-UEFA-New-Presidentslogds

Related posts: