ஸ்டீவன் சுமித்தை ஊடகங்கள் சுதந்திரமாக விட வேண்டும் – டெரன் சமி !
Saturday, June 30th, 2018
ஆசி அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவன் சுமித்தை ஊடகங்கள் சுதந்திரமாக விட வேண்டும் என்று மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் தலைவர் டெரன் சமி கோரியுள்ளார்.
ஸ்டீவன் சுமித் உடன் கெமரன் பன்க்ராப்ட் மற்றும் டேவிட் வோர்னர் ஆகிய அவுஸ்திரேலிய வீரர்கள் பந்தினை சேதப்படுத்திய குற்றத்துக்காக தடை விதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது அவர்கள் கனடாவில் நடைபெறவுள்ள 20க்கு20 கிரிக்கட் சுற்றுப் போட்டிகளில் உள்நாட்டு அணிகளுக்காக விளையாடவுள்ளனர். இந்தநிலையில் ஸ்டீவன் சுமித் நியுயோர்க்கில் இரவு விடுதி ஒன்றில் மதுபானம் அருந்தும் படம் ஒன்று பல பத்திரிகைகளில் வெளியாகி இருந்தன.
இவ்வாறு அவர் ஊடகங்களால் துரத்தப்படுவது அவரை மேலும் வருத்தத்தில் ஆழ்த்தும் என்று டெரன் சமி தெரிவித்துள்ளார்.
Related posts:
இலங்கை டி20 குழாமில் பாரிய மாற்றம் - டி20 தொடருக்கு தலைவராக தரங்க!
இலங்கை ஜாம்பவான்களின் சாதனையை உடைத்தெறிந்த நியூசிலாந்து வீரர்!
கோஹ்லியை பற்றி பேச வேண்டிய அவசியமில்லை -கும்ப்ளே
|
|
|


