வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக சஹீர்கான் – ஹர்பஜன்!

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் பதவிக்கு, இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சஹீர்கானை நியமிக்க வேண்டும் என முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணிக்கு வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் ஒருவரை நியமிக்க வேண்டும் என அணியின் தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவும், இந்திய அணியின் தலைவரான விராட் கோஹ்லியும் கோரிக்கை விடுத்துள்ளதன் பின்னணியில் ஹர்பஜன் இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.
வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் பதவிக்கு சஹீர்கான் பொருத்தமானவராக இருப்பார் என்றும் ஹர்பஜன்சிங் குறிப்பிட்டார். வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக செயற்படுவதற்கு விரும்புவதாக ஏற்கனவே சஹீர்கான் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மோட்டார் பந்தயத்தில் சாதித்த இலங்கையர்!
இந்தியாவுடனான ஒரு நாள் தொடரில் இலங்கைக்கு மத்தியூஸ் ஆறுதல் கொடுப்பாராம் - சனத் ஜெயசூர்யா!
பாகிஸ்தான் தொடரில் சந்திமால் இணைப்பு!
|
|