ரியோ ஒலிம்பிக்: அதிர்ச்சியில் இந்தியா!

Wednesday, July 27th, 2016

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் குண்டு எறிதல் போட்டியில் தங்கம் வென்ற இந்தியாவின் இந்திரஜித் சிங் ஊக்க மருந்து சோதனையில் தோல்வியடைந்துள்ளார்.

ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய இந்திய மல்யுத்த வீரர்கள் நார்சிங் யாதவ், சந்தீப் துல்சி யாதவ் சிக்கிய நிலையில் மற்றொரு அதிர்ச்சி சம்பவமாக இது அமைந்துள்ளது. இந்திரஜித் சிங்கிற்கு கடந்த 22ம் திகதி பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வமாக வெளியான பரிசோதனையின் முடிவில் அவர் ஊக்கமருந்து பயன்படுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான தகவலை இந்திரஜித் சிங்கிடம் தேசிய ஊக்கமருந்து தடுப்பு கழகம் தெரிவித்துள்ளது. இந்திரஜித் சிங் ‘பி’ மாதிரி சோதனை நடத்து வேண்டும் என்றால், அதனை 7 நாட்களில் நடத்த வேண்டும் என்று தேசிய ஊக்கமருந்து தடுப்பு கழகம் கேட்டுக் கொண்டு உள்ளது.

சந்தேகம் ஏற்படும் போது இன்னொரு முறை சோதனை செய்வதற்காக இந்த நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது. அவரது முன்னிலையில் ‘பி’ மாதிரி திறக்கப்பட்டு, சோதனைக்கு உட்படுத்தப்படும் ‘பி’ மாதிரி பரிசோதனையில் அவர் ஊக்கமருந்து எடுத்துக் கொண்டார் என்று உறுதியானால், ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திரஜித் கலந்துக் கொள்ள முடியாது. WADA புதிய விதிமுறைகளின்படி 4 ஆண்டுகளுக்கு அவருக்கு தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: