வெற்றியின் இரகசியம் பங்களாதேஷ் அணியின் பயிற்சியாளர்!

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தனது வரலாற்று டெஸ்ட் வெற்றியை பதிவு செய்தமை குறித்து பங்களாதேஷ் அணியின் பயிற்சியாளர் ஷந்திக்க ஹத்துருசிங்க ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ளார்.
“முதல் டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணியின் தோல்விக்குப் பின்னர் அணியுடன் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டேன். அவர்கள் இரண்டாம் போட்டியில் வேறு விதமான புத்துணர்வுடன் களத்தில் இறங்கினார்கள் என்றே கூற வேண்டும். அதனை அவர்கள் சாதித்தார்கள்.
நமது அணி குறித்து புதியதோர் நம்பிக்கை பிறந்தது. எம்முறையிலாவது இப்போட்டியில் வெற்றி பெற வேண்டும் என அணியினர் எண்ணினர். முதல் போட்டியின் போது மனதளவில் உளைச்சலுக்கு ஆளானோம். அதன் பின்னர் அணியில் மாற்றம் செய்ய வேண்டும் என சிந்தித்து அதன் படி செயற்பட்டோம். உண்மையில் பங்களாதேஷ் அணியில் உள்ள வீரர்கள் சற்றே உணர்ச்சி வசப்படுபவர்கள். பொதுவாக வெற்றியினை ஈட்டும் போதே அவர்கள் அவ்வாறு இருக்கின்றார்கள். அவர்கள் போட்டிகளில் பங்கேற்கும் போது எல்லாம் சரியாக அமையும் என எதிர்பார்க்கின்றேன்.. ” என தெரிவித்திருந்தார்
Related posts:
|
|