வீடியோ கேம்ஸ் – ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இணைகிறது!
Friday, April 21st, 2017
2022ம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வீடியோ விளையாட்டுக்கள் சேர்க்கப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
இதனை முன்னிட்டு பரீட்சார்த்தமாக 2018ம் ஆண்டு இந்தோனேஷியாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழாவில் வீடியோ விளையாட்டை அறிமுகப்படுத்தப் போவதாக ஒலிம்பிக் பேரவை அறிவித்துள்ளது.இந்த இலத்திரனியல் விளையாட்டில் பங்குபற்றுவோர் தமது திறமைகளை வெளிக்காட்டி பதக்கங்களை வெல்லலாம் என ஆசிய ஒலிம்பிக் பேரவை அறிவித்துள்ளது.
இந்த விளையாட்டு வடிவத்தின் சடுதியான வளர்ச்சியினைக் கருத்திற்கொண்டு இதனை ஆசிய மட்ட போட்டிகளில் சேர்ப்பதென தீர்மானித்துள்ளதாக பேரவை தெரிவித்துள்ளது.
Related posts:
ஸ்ரீசாந்த் மீதான தடையை நீடித்து நீதிமன்றம் உத்தரவு
உலகக்கிண்ணம் – இன்றைய போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அவுஸ்திரேலியா மோதல்!
இலங்கையில் இரண்டு விளையாட்டு வீரர்களுக்கு கொரோனா தொற்று!
|
|
|


