விராட் கோஹ்லிக்கு எதிரான குற்றச்சாட்டு – ஏற்றுக்கொள்கிறது இந்திய தரப்பு!

Saturday, November 5th, 2022

இந்திய கிரிக்கட் வீரர் – விராட் கோஹ்லி ‘போலியான களத்தடுப்பில் ஈடுபட்டமையை இந்திய முன்னாள் வீரர் ஒருவரும் ஏற்றுகொண்டுள்ளார்.

இந்த நிகழ்வு  குறித்து யூடியூப் காணொளி ஒன்றில் பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, கோஹ்லி பந்தை வீச முயன்ற விதத்தை பார்க்கும் போது அது 100வீத போலி களத்தடுப்பு என்று தெரிகிறது.

நடுவர்கள் அதை பார்த்திருந்தால், பங்களாதேஷ அணிக்கு ஐந்து ஓட்டங்கள் தண்டனை ஓட்டங்களாக கிடைத்திருக்கும்.

இந்தியாவும் இந்தப்போட்டியில் ஐந்து ஓட்ட வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றது. எனினும் நாம் தப்பித்துள்ளோம்.

இந்தநிலையில் அடுத்த முறை யாராவது இதைச் செய்தால் நடுவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்த சம்பவம்  குறித்து பங்காளதேஷ அணி முறையிட்டது சரியான விடயம். என்றாலும் இப்போது எதுவும் செய்ய முடியாது என்று சோப்ரா குறிப்பிட்டுள்ளார்.

இருபத்துக்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியின் நேற்று முன்தின ஆட்டத்தில் இந்தியா-பங்காளதேஷ் அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி டக்ஒர்த் லூயிஸ் முறைப்படி வெற்றி பெற்றது.

இந்த போட்டி முடிந்த பிறகு விராட் கோஹ்லி மீது பங்காளதேஷ் தரப்பு குற்றச்சாட்டை முன்iவத்தது.

பங்காளதேச அணியின் இன்னிங்ஸ் போது விராட் கோஹ்லி தனது கைகளில் பந்து இல்லாமலேயே ஓட்டங்களை பெறும்போது ஆட்டமிழப்பு செய்ய முயல்வது போன்று நடித்து துடுப்பாட்ட வீரரை குழப்பினார் என்பதே அந்த குற்றச்சாட்டாகும்.

Related posts: