விராட் கோலி முதலிடத்தில் !

ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் துடுப்பாட்டக்காரர் தர வரிசை பட்டியலில் இந்திய அணியின் தலைவர் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் துடுப்பாட்டக்காரர் தர வரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இதில் விராட்கோலி 865 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.
2-வது இடத்தில் அவுஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் (861 புள்ளி), 3-வது இடத்தில் தென்னாப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ் (847 புள்ளி) உள்ளனர். இந்தியாவின் ஷிகர் தவான் 10-வது இடத்தில் உள்ளார். பந்து வீச்சாளர்களில் அவுஸ்திரேலிய வீரர் ஹேசல்வுட் (732 புள்ளி) முதலிடத்தில் உள்ளார். முதல் 10 இடத்தில் இந்திய பந்து வீச்சாளர்கள் யாரும் இடம் பெறவில்லை
Related posts:
ஐ.பி.எல் தொடர்: ப்ளேஓப் சுற்றுக்கு தெரிவான அணிகள்!
நம்பிக்கையை கட்டியெழுப்பும் மாநாட்டில் ஜனாதிபதி விசேட உரை!
சங்கா தலைமையில் எம்.சி.சி. பாகிஸ்தானுக்கு பயணம்!
|
|