விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் சூதாட்டம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

Monday, July 24th, 2017

நடப்பாண்டில் இடம்பெற்ற விம்பிள்டன் மற்றும் பிரெஞ்ச் ஒபன் டென்னிஸ் தொடர்களில் சூதாட்டம் இடம்பெற்றிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகின் முன்னணி கிறான்ஸ்லாம் தொடராக  கருதப்படும் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் இவ்வாண்டு ஜூன் மாதம் 25 ஆம் திகதி முதல் ஜூலை 15 ஆம் திகதி வரை நடைபெற்றது. இந்த தொடரின் மூன்று போட்டிகளில் சூதாட்டம் இடம்பெற்றதாக முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இரண்டு தகுதிப் போட்டிகளிலும் முக்கிய போட்டி ஒன்றிலும் இந்த சூதாட்டம் இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் டென்னிஸ் போட்டிகளில் இடம்பெறும் சூதாட்டம் உள்ளிட்ட முறைப்பாடுகளை விசாரணை செய்யும் டென்னிஸ் ஒருங்கிணைந்த அமைப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை ஜூன் மாதம் நடைபெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி ஒன்றிலும் சூதாட்டம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் முதல் யூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் டென்னிஸ் போட்டிகளில் சூதாட்டம் தொடர்பாக 53 முறைப்பாடுகள் பெறப்பட்டடுள்ளதாக டென்னிஸ் ஒருங்;கிணைந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

Related posts: