விடைபெற்றார் உசைன் போல்ட்!

Sunday, August 6th, 2017

உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் 100 மீற்றர் ஓட்டத்தில், அமெரிக்காவின் ஜஸ்டின் கால்டின் தங்கப்பதக்கம் வென்றார். ஜமைக்காவின் மின்னல் மனிதன் உசைன் போல்ட் வெண்கலப்பதக்கம் வென்றார்.உலகின் மின்னல் மனிதன் ஜமைக்காவின் உசைன் போல்ட். இவர் பீஜிங் (2008),  இலண்டன் (2012), ரியோ (2016) என ஒலிம்பிக் அரங்கில் 100 மீற்றர், ஓட்டத்தில் ஹட்ரிக் தங்கம் வென்று அசத்தியவர். தவிர, இதே ஒலிம்பிக்கில் 200 மீ, 4*100 மீ. ஓட்டத்திலும் மூன்று முறையும் தங்கம் வென்றிருந்தார். ஆனால் இவரது அணி வீரர் செய்த தவறால், இவரது ஒரு 4*100 மீ ஒலிம்பிக் தங்கம் பறிபோனது.

இவர், லண்டனில் நடக்கும் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடருடன் ஓய்வு பெறுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்று நடந்த உலக தடகள் சாம்பியன்ஷிப் தொடரின் 100 மீ., இறுதிப்போட்டியில் பங்கேற்ற போல்ட், பந்தய தூரத்தை 9.95 வினாடிகளில் கடந்து வெண்கலப்பதக்கம் வென்று விடைபெற்றார்.இத்துடன் தனது வெற்றிகரமான தடகள பயணத்துக்கு விடை கொடுத்தார் இவரது போட்டியாளரான அமெரிக்காவின் ஜஸ்டின் கால்டின் 9.92 வினாடிகள் தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார். தொடர்ந்து, சக வீரரான கோலிமேன் இரண்டாவது இடம் (9.94 வினாடிகள்) பிடித்தார்

Related posts: