வாய்ப்பு மறுப்பு: கனடாவில் களமிறங்கும் மாலிங்க!
Saturday, May 26th, 2018
உலகக் கிண்ணத் தொடரில் வாய்ப்பு மறுக்கப்பட்ட இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க கனடாவில் இடம்பெறவுள்ள கனடா க்ளோபல் இருபதுக்கு இருபது போட்டித்தொடரில் (Global T20 Canada league) கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
லசித் மாலிங்கவுடன் பந்தை பழுது படுத்தியதால் போட்டித் தடை விதிக்கப்பட்ட அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் , கிரிஸ் கேய்ல், ஷைட் அப்ரிடி , டெரன் சமி , சுனில் நரேன் , டேவிட் மில்லர் மற்றும் ட்வென் பிராவோ ஆகிய பல வீரர்கள் இந்த தொடரில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
போட்டித் தடை விதிக்கப்பட்ட முன்னாள் அவுஸ்திரேலிய அணித்தலைவரான ஸ்டிவன் ஸ்மித்க்கு அந்நாட்டு கிரிக்கட் சபை வௌிநாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதியளித்துள்ள நிலையில் , அவருடன் போட்டித்தடைக்கு ஆளான டேவிட் வோர்னரும் இந்த போட்டித் தொடரில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் ஜூன் மாதம் 28ம் திகதி இந்த போடடித் தொடர் ஆரம்பமாகவுள்ளது. இந்த போட்டித் தொடரில் 6 அணிகள் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
|
|
|


