வலைப்பந்தாட்டத் தொடரில் வரணி மத்தி சம்பியனானது!
Tuesday, March 20th, 2018
தென்மராட்சி வலயப் பாடசாலைகளுக்கு இடையிலான வலைப்பந்தாட்டத்தில் 18 வயதுப் பெண்கள் பிரிவில் சம்பியனாகியது வரணி மத்திய கல்லூரி அணி.
சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இந்த இறுதியாட்டத்தில் வரணி மத்திய கல்லூரி அணியும் கொடிகாமம் திருநாவுக்கரசு வித்தியாலயமும் மோதின. இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் வரணி மத்திய கல்லூரி 10:4 என்ற புள்ளிகளின் அடிப்படையில் முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியிலும் அபாரமாகச் செயற்பட்ட வரணி மத்திய கல்லூரி அணி முடிவில் 17:10 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றிபெற்று கிண்ணம் வென்றது.
Related posts:
மாலிங்க இல்லாதது குறித்து கவலைபடவில்லை - பர்தீவ் பட்டேல்!
பாகிஸ்தானுக்கு சென்று விளையாட மாட்டோம் - இலங்கை !
2028 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டையும் சேர்க்கப் பரிந்துரை!
|
|
|


