வரலாற்றில் இடம்பிடித்த பங்களாதேஸ் வீரர்!

தற்போது இலங்கை அணியுடன் இடம்பெற்று வரும் போட்டியில் பங்களாதேஸ் அணி வீரர் சபீர் ரஹ்மன் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் தனது ஆயிரமாவது ஓட்டத்தைபூர்த்தி செய்தார்.
இந்த போட்டியில் அவர் ஆட்டமிழக்காது 24 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். இதில் விளையாடுவதற்கு முன்னர் சபீர் 985 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
இந்நிலையில் தற்போது பெற்றுக்கொண்ட ஓட்டங்களுடன் அவர் மொத்தமாக 1009 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். அவர் இந்த ஓட்டங்களை 48 ஒருநாள் போட்டிகளில்விளையாடி பெற்றுள்ளார்.
சபீர் ரஹ்மன் 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 480 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். அதேபோல் 33 இருபதுக்கு இருபது போட்டிகளில் விளையாடி 745 ஓட்டங்களைப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அரையிறுதியில் ஜோக்கோவிச்!
பார்சிலோனா கால்பந்து அணியின் பயிற்சியாளராக எர்னெஸ்டோ !
நான் தலைவன் இல்லை - ரபாடா!
|
|