வடக்கின் முதல்வனாய் முடிசூடியது ஆவரங்கால் மத்தி அணி!
Friday, June 22nd, 2018
ஆவரங்கால் மத்தி அணி இறுதி நேரத்தில் அபாரமான ஆட்டத்தை கையிலெடுத்து, சம்பியன் பட்டத்தை வென்றது.
99 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையம் வடமாகாண ரீதியில் கரப்பந்தாட்ட தொடரை நடத்தியது.
இந்தக் கரப்பந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டியில் ஆவரங்கால் இந்து இளைஞர் அணியை எதிர்த்து ஆவரங்கால் மத்தி விளையாட்டுக்கழக அணி மோதியது.
முதற் சுற்றை ஆவரங்கால் மத்தி அணி, 25:18 என்ற புள்ளிகள் அடிப்படையில் கைப்பற்றியது.
இரண்டாவது சுற்றை ஆவரங்கால் இந்து இளைஞர் அணி, 25:21 என்ற புள்ளிகள் அடிப்படையில் கைப்பற்றி பதிலடி கொடுத்தது.
எனினும் மூன்றாவது மற்றும் நான்காவது சுற்றை 25:22 மற்றும் 27:25 என்ற செற்கள் அடிப்படையில் ஆவரங்கால் மத்தி விளையாட்டுக்கழக அணி கைப்பற்றி சம்பியனாகியது.
Related posts:
மஸ்ரபீ முர்தஷாவுக்கு போட்டித் தடை !
மலேசிய ஓபன்தொடரட: லின் டான் சாம்பியன்!
தேசிய ரீதியிலான கால்பந்தாட்ட போட்டி இன்று!
|
|
|


