வடக்கின் சுப்பர் கிங் கிரிக்கெற் போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!

Saturday, October 8th, 2016

வடக்கின் சுப்பர்கிங் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இச் சுற்றுப்போட்டிகள் சுன்னாகம் மயிலங்காடு ஞான முருகன் விளையாட்டுக்கழகத்தால் நடத்தப்படவுள்ளது.

இக் கிரிக்கெட் சுற்றுப்போட்டி 6 பேர் கொண்ட அணியாகவும் 5 பந்துப் பரிமாற்றங்களை கொண்டதுமாகும். இப்போட்டிகள் உரும்பிராய் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெறுமெனவும் ஞான முருகன் விளையாட்டுக்கழகத்தினர் அறிவித்துள்ளனர்.

வெற்றி பெறும் அணிக்கு வெற்றிக் கிண்ணமும் 10ஆயிரம் ரூபா பணப்பரிசும், இரண்டாம் இடத்தினை பெறும் அணிக்கு வெற்றிக் கிண்ணமும் 5ஆயிரம் ரூபா பணப்பரிசும் வழங்கப்படவுள்ளது. போட்டிக்கு விண்ணப்பிக்கும் விளையாட்டுக்கழகங்கள் 0779569153, 0775292896 என்னும் தொலைபேசி இலக்கத்துடன் உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு போட்டி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

K7

Related posts: