வங்கதேச வீரர்களை புகழ்ந்த முரளிதரன்!
Sunday, March 19th, 2017
வங்கதேச அணியைச் சேர்ந்த சகிப் அல்ஹசன் சிறந்த பன்முக ஆட்டக்காரர் என்று இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
வங்கதேச அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.இதில் இரு அணிகள் விளையாடி வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச வீரர் சகிப்அல்ஹசன் சதம் அடித்து அசத்தினார். அதுமட்டுமின்றி தன்னுடைய சுழலிலும் அசத்தி வருகிறார்.
இந்நிலையில் இது குறித்து இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் கூறுகையில், கடந்த சில வருடங்களாகவே சகிப்பின் ஆட்டம் சிறப்பாக இருக்கிறது. சர்வதேச அளவில் உள்ள சிறந்த பன்முக ஆட்டக்காரர்களில் சகிப்பும் ஒருவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
மேலும் வங்கதேச அணியின் வேகப்பந்து வீச்சாளரான முஸ்தபிசுர் ரஹ்மானும் சிறந்த பந்து வீச்சாளர் என்றும் எளிதில் எதையும் கற்றுவிடும் திறமை அவருக்கு உண்டு என கூறியுள்ளார்.
Related posts:
|
|
|


