வங்கதேசம் செல்லும் இலங்கை வீரர்கள்!

வங்கதேசத்தில் நடைபெற உள்ள பி.பி.எல் பிரீமியர் லீக் போட்டியில் 12 இலங்கை வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
கிரிக்கெட் விளையாடும் பல்வேறு நாடுகளில் உள்ளூர் டி20 போட்டிகள் நடைபெறுகின்றன. உதாரணமாக இந்தியாவில் ஐபில் போட்டியும், அவுஸ்திரேலியாவில் பிக் பாஷ் போட்டியும், மேற்கிந்திய தீவுகள் மற்றும் பல நாடுகள் உள்ளூர் டி20 போட்டிகள் நடத்துகின்றன.
அது போல் வங்கதேசத்திலும் உள்ளூர் டி 20 போட்டியான பிபில் டி 20 போட்டி நடைபெறுகிறது. இதில் 7 அணிகள் பங்கேற்கின்றன. இத்தொடரில் பங்கேற்க இலங்கை வீரர்கள் 12 பேர் வங்கதேசம் பறக்கின்றனர்.
அதில் டில்சான் மனுவீரா பாரீசல் புல்ஸ் அணிக்கும், சத்துரங்க டி சில்வா, ஜீவன் மெண்டிஸ் ஆகியோர் சிட்டாகாங் விக்கிங்ஸ் அணிக்கும், திசார பெராரா கோமிலா விக்டோரியன்ஸ் அணிக்கும், ஜெயவர்த்தனே, சங்ககாரா டாக்கா டைனைமைட்ஸ் அணிக்கும், மற்றும் நுவன் குலசேகரா, சசித்திர செனநாயகே, கிகான் ருபசிங், மிலிந்த சிரிவர்த்தனா, உபுல் தரங்கா, சீகுகி பிரசன்னா ஆகியோர் மற்ற அணிகளில் விளையாட உள்ளனர்.
இத்தொடருக்கான முதல் போட்டி இன்று மிர்புர் மைதானத்தில் Comilla Victorians மற்றும் Rajshahi Kings அணிக்கும் நடைபெற இருந்தது. மழை காரணமாக இப்போட்டி இரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கு தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|